கரோனா அச்சம்; இந்தியாவில் இருந்து  வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நேபாள அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் இருந்து வருபவர்கள் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.

2.8 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நேபாளத்தில் இதுவரையில் 682 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைக்களுக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலைக்கு நேபாளம் தள்ளப்பட்டு இருக்கிறது.

நேபாளின் வருவாயில் சுற்றாலத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கரோனா வைரஸால் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள போதிய நிதியின்றித் திணறி வரும் நேபாளம் நாட்டுக்கு சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) 214 மில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தநிலையில் கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் நேபாள நாட்டினருக்கும் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியதாவது:
தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிட்டால் நேபாளத்தில் கரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் திரும்புபவர்களுக்கு கரோனா இருக்ககூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே கரோனா பரிசோதனைக்கு பிறகு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

விளையாட்டு

40 mins ago

க்ரைம்

44 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்