நியூயார்க்கில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சீனாவைக் கடந்தது

By செய்திப்பிரிவு

சீனாவில் ஏற்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கையை விட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிக அளவிலான தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழமான ஜான் ஹோப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியுள்ள நியூயார்க் நகரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையை விட (82,160 பேர் பாதிப்பு) அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் 5,695 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,410 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 6,898 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் இந்த அளவு கரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களால் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் சுமார் 5,57,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 22,000 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

30 mins ago

இந்தியா

43 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்