வாசனை இழப்புகூட கரோனா அறிகுறியாக இருக்கலாம்: பிரான்ஸ் விஞ்ஞானிகள் புதிய தகவல்

By ஐஏஎன்எஸ்

வாசனை இழப்புகூட கரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவர்கள் சிலரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு, ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் ஆகியவை உள்ளது. இந்நிலையில் வாசனையை அறியும் தன்மையை இழப்பதும் கரோனா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸ் சுகாதார சேவைத் தலைவர் ஜெரோம் சாலமன் கூறும்போது, ''மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் ஒழுகுவது ஆகிய அறிகுறிகள் இல்லாமல், திடீரென வாசனையை நுகரும் தன்மையை இழந்தால் அது கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம். இது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஏற்படுகிறது.

நிகழ்காலத்தில் செய்த சோதனைகளின் அடிப்படையில், இதைக் கூறுகிறோம். இதையும் கரோனா தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகக் கருத வேண்டும்.

அப்படிப்பட்ட மக்களைச் சுய தனிமைப்படுத்த வேண்டும். தற்போது கரோனாவின் வழக்கமான அறிகுறிகள் இல்லாதவர்கள் இந்த அறிகுறியுடன் இருப்பது அதிகரித்து வருகிறது.

ருசியின் தன்மையை இழப்பது கூட, கரோனாவின் அரிய வகை அறிகுறியே'' என்று தெரிவித்துள்ளார். எனினும் மற்ற மருத்துவர்கள் இதுதொடர்பான ஆய்வு இன்னும் முழுமை அடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்