ஈரானில் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆலோசகர் கரோனா வைரஸால் மரணம்

By செய்திப்பிரிவு

ஈரான் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆலோகர் முகமது மிர்முகமதி கோவிட் 19 (கரோனா வைரஸ் ) காய்ச்சல் பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் தேசிய ஊடகங்கள், ”ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அலோசகராக இருந்தவர் முகமது மிர்முகமதி, 71 வயதான முகமது மிர்முகமதி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவட் மரணம் அடைந்தார்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் மதத் தலைவர்களில் ஒருவரான ஹதி கோஸ்ரோஷாகி கடந்த வாரம் மரணம் கோவிட் 19 (கரோனா வைரஸ்) பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 210 இருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

ஆனால் இதனை ஈரான் அரசு பொய்யான தகவல் என்று முழுவதுமாக மறுத்துள்ளது. முன்னதாக ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் காரணமாக 34 பேர் பலியானதாக ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81,200க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 secs ago

க்ரைம்

4 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்