காட்டுத் தீக்குப் பிறகு பலத்த மழையை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

காட்டுத் தீயைத் தொடர்ந்து, கடுமையான மழையை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கனமழை காரணமாக கடுமையான வெள்ளப் பெருக்கு குவின்ஸ்லாந்து போன்ற மாகாணங்களில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிட்னி நகரில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக அணைகள் பல நிரம்பியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக காட்டுத் தீயினால் ஏற்பட்ட வறட்சியை ஈடு செய்யும் வகையில் பலத்த மழை பெய்து வருவதால் ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 33 பேர் பலியாகினர். கோலா கரடி, கங்காரு உட்பட பல அரியவகை விலங்கினங்கள் பலியாயின. மேலும் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தவறவீடாதீர்

முழு அட்லாண்டிக்கையும் ஐந்தே மணி நேரத்தில் கடந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

சம்பந்தமில்லாத புகார்களை நாங்கள் ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம்: ஷாஹின்பாக் போராட்ட தாய்மார்களிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

எங்களிடம் பிளான் பி இருக்கிறது: சிரியாவை மிரட்டும் துருக்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்