கென்யாவின் முன்னாள் அதிபர் மரணம்

By செய்திப்பிரிவு

கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.

உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களாக அரப் மோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

அரப் மோய் மறைவுக்கு கென்ய அதிபர் உகுரு கென்யட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ நமது அரசும் நமது கண்டமும் மறைந்த டேனியல் அரப் மோய்யால் ஆசிர்வதிக்கப்பட்டன. அவர் வாழ்நாள் முழுவதும் கென்யாவுக்காக சேவை புரிந்தார்” என்றார்.

கென்யாவின் அதிபராக 1978 ஆம் ஆண்டு பதவி ஏற்ற அரப் மோய் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். மோய் தனது ஆட்சிக் காலத்தில் கென்யாவில் வறுமை அதிகரித்தற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

17 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

11 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

25 mins ago

வலைஞர் பக்கம்

29 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

44 mins ago

மேலும்