ஆப்கன் படைகள் தாக்குதல்: 14 தலிபான்கள் பலி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 தலிபான்கள் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ”ஆப்கானிஸ்தானில் குண்டஸ் மாகாணத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் 14 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டன. தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை தளபதியும் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாக ஆப்கன் படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஆப்கன் பாதுகாப்புப் படை நடத்தும் தாக்குதலில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

15 mins ago

வாழ்வியல்

39 mins ago

தமிழகம்

55 mins ago

ஆன்மிகம்

13 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்