சிரியாவில் வான்வழித் தாக்குதல்: மியான்மர் மருத்துவப் பயிற்சியாளர் பலி

By செய்திப்பிரிவு

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மியான்மர் மருத்துவப் பயிற்சியாளர் ஒருவர் மரணமடைந்ததாக தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் டேவிட் ஹுயுபன்க் கூறும்போது, ''சிரியாவின் வடகிழக்குப் பகுதி எல்லையில் ஏற்பட்ட மோதலைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது, பீரங்கி தாக்குதலில் வியட்நாமைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும், மருத்துவப் பயிற்சியாளருமான சா செங் மரணமடைந்தார். மேலும் இந்தத் தாக்குதலில் இராக்கைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப, துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும் சிரிய எல்லையில் துருக்கி மற்றும் சிரியப் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்