அரசியல் பழிவாங்கலில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்.. பிரிட்டன் எதிர்க்கட்சி வேட்பாளர் வேதனை

By செய்திப்பிரிவு

லண்டன்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் பாலியல் வன்முறைக்கு ஆளானேன் என்று தொழிலாளர் கட்சி வேட்பாளர் எமிலி ஓவன் (24) தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பிரதான எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது பிரிட்டிஷ் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தால் அந்த நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்படுவதாக தொழிலாளர் கட்சி கடுமையாகக் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2017 பொதுத்தேர்தலில் நார்த் வேல்ஸ் பகுதியின் அபர்கான்வி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தொழிலாளர் கட்சி வேட்பாளர் எமிலி ஓவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அரசியல் காரணங்களுக்காக அண்மையில் பத்திரிகையாளர் ஓவன் ஜோன்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன். அரசியல்ரீதியாக நானும் பழிவாங்கப்பட்டேன். கடந்த 2017 பொதுத்தேர்தலின் போதே எனக்கு பகிரங்கமாக பாலியல் வன்முறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதோடு நிற்காமல் நான் குடித்த பானத்தில் மயக்க மருந்தை கலந்து என்னை பாலியல் வன்முறை செய்தனர்.

எனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்வதா, வேண்டாமா என சில மாதங்கள் குழம்பினேன். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக போலீஸில் புகார் செய்யவில்லை. அப்போது ஏற்பட்ட மோசமான பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தேன். என்னை பாலியல் வன்முறை செய்தவனையும் மன்னித்து விட்டேன்.

ஆனால் இப்போதைய அரசியல் சூழ்நிலை மிகவும் கவலையளிக் கிறது. மாற்றுக் கருத்துடையோர் பொது இடங்களில் கடுமையாக தாக்கப்படுகின்றனர். சமூக வலை தளங்களில் மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு இடையே கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால் வன்முறையில் இறங்குவதை அனுமதிக்கக் கூடாது. இந்த மோசமான கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் களும் வன்முறையைத் தூண்டி வருவதாக எமிலி ஓவன் மறை முகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:

முன்பின் அறிமுகம் இல்லாத நபர் என்னை பாலியல் வன்முறை செய்தார். அதன்பிறகு தனியாக வெளியில் செல்லக்கூட அஞ்சி னேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் உறுதுணையாக இருந் தனர். அவர்களின் உதவியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும் பினேன்.

இப்போதும் சமூக வலைதளங் களில் பகிரங்கமாகவே மிரட்டல் கள் வருகின்றன. ஒவ்வொரு விவகாரத்துக்கும் போலீஸ் நிலையத்துக்கு செல்ல முடியாது. தற்போதைய ஆட்சியில் எதிர்க் கட்சித் தலைவர்கள், சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. இதை தடுக்க வேண்டியது அவசியம். ஆளும் கட்சிக்கு பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

29 mins ago

க்ரைம்

33 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்