சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலை ஈரான் நடத்தியிருக்க வாய்ப்பு அதிகம்: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாகுதல் ஈரானிய தளத்திலிருந்து ஏவப்பட்டதற்கு நிறைய சாத்திய கூறுகள் இருப்பதாக சவுதி, அமெரிக்க விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் ஆரம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்க வெளியிட்டது. இது அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டு என கூறி ஈரான் மறுத்தது. மேலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்தது.

இந்த நிலையில் சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலை ஈரான் நடத்தியிருக்க வாய்ப்பு அதிகமுள்ளதாக சவுதி, அமெரிக்க விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரணை குழுவினர் கூறும்போது, “ ”இந்தத் தாக்குதல் இராக் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஈரான் தளத்திலிருந்து நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. மேலும் அந்த ஏவுகணைகள் வடக்கிலிருந்து வீசப்பட்டுள்ளன. எனவே தெற்கே அமைந்துள்ள ஏமனிலிருந்து ஏவுகணை வீசப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்