44 ஆயிரம் வீரர்கள் குவிப்பு: அமேசான் காட்டுத் தீயை அணைக்க தீவிர முயற்சி

By செய்திப்பிரிவு

ரியோ டி ஜெனிரோ

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க பிரேசில் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

உலக அளவில் பிரபலமானது அமேசான் காடுகள். இக்காட்டில் அரிய வகை மரங்கள், உயிரினங் கள், அபூர்வ விலங்கினங்கள், பூச்சிகள் உள்ளன. பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலி வியா, கயானா ஆகிய நாடுகளில் இக்காடுகள் பரவியுள்ளன. உல கிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 சதவீதம் அமேசான் காடுகள் மூலம் கிடைக்கிறது.

இக்காட்டின் அதிக அளவிலான பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. 3 வாரங்களுக்கு முன் அமேசான் காட்டில் தீ பற்றியது. மள மளவென காட்டுத் தீ பரவியது. இதனால், பல கி.மீ. தூரத்துக்கு தீ பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும் உலக நாடுகளும் வலியுறுத்துகின்றன.

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீயை அணைக் கும் பணியில் 44 ஆயிரம் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள் ளது.

இவர்கள் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபடுவார் கள் என்றும் முதல் கட்டமாக 700 வீரர்கள் அனுப்பப்பட்டுள் ளதாகவும் பிரேசில் ராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசி வீடோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமேசான் காடு களில் எரியும் தீயை அணைக்க ஜி 7 நாடுகள் உதவி செய்யும் என்றும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அமேசான் காடு உலகின் நுரையீரல் என்றும் அக்காட்டில் தீ ஏற்பட்டுள்ளது கவலை அளிப்ப தாகவும் விரைவில் தீ அணைய 130 கோடி கத்தோலிக்க மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

16 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

47 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்