‘‘காஷ்மீர் விவகாரத்தில் 3-ம் நாட்டின் தலையீடு தேவையில்லை’’ - பிரதமர் மோடி சந்திப்புக்கு  பிறகு பிரான்ஸ் அதிபர் உறுதி

By செய்திப்பிரிவு

பாரிஸ்
காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகள் தொடர்புடையது, இதில் மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை என பிரான்ஸ அதிபர் மக்ரோன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக நேற்று புறப்பட்டார். முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று வரை அங்கு இருக்கிறார்.

இன்று அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு நாடு, பஹ்ரைன் பயணம் செய்யும் பிரதமர் மோடி பின்னர் பாரிஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டிலும் பங்கேற்கிறார். 25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.
இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அவர் சந்தி்தது பேசினார்.

அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா எப்போதுமே நல்ல உறவை பராமரித்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்கள் அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இது மகிழ்ச்சி தரும் தருணம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருநாடுகளும் தொழில், வர்த்தகம், வெளியுறவு என பலதுறைகளிலும் இணைந்து பணியாற்றி வருகின்றன’’ எனக் கூறினார்.

இதன் பின்னர் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறுகையில் ‘‘காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகள் தொடர்புடையது. இந்த விஷயத்தில் இருநாடுகளும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு என்பது தேவையில்லை’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

வர்த்தக உலகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

48 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்