சீனாவில் நூதனமாக மாணவர்கள் காப்பி- ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

By பிடிஐ

சீனாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பல்கலைக்கழகத் தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை தடுக்க கண்காணிப்புக்கு ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 'ஹை டெஸ்ட்' என்று குறிப்பிடப்படும் இந்த தேர்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் உயர் பதவிகளை பெறும் வேலைகளை அடைய முடியும்.

தேர்ச்சி அடையாத மாணவர்கள் ஊதியம் குறைவான வேலைகளுக்கு மட்டுமே செல்ல முடியும் என்ற வழிமுறை இருந்து வருகிறது.

ஆனால், இத்தேர்வில் வெற்றி பெறும் நோக்கத்தோடு சீன மாணவர்கள், பல்வேறு அதிநவீன தொழில்நூட்பங்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுப்படுகின்றனர். ஒயர்லெஸ் கருவிகள், ப்ளூடூத் என பல விதிமீறல்களில் மாணவர்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்படுகிறது.

எனவே, இதனை தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப ரேடியோ கண்காணிப்பு கருவிகள், ஆளில்லா குட்டி விமானங்களை தேர்வு நடைபெறும் மையங்களில் பறக்கவிடப்பட்டு அதன் மூலம் மின்னணு சாதனங்களின் சிக்னல்களை கண்டறிந்து தேர்வை கண்காணிக்கும் முறையை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

வணிகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்