ஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை’

By பிடிஐ

குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோடஸ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக அவர் பங்கேற்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டமாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாவுடன் அவரது மனைவி மிச்சேல் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்சேல் மட்டுமே இந்தியா வருவார் என்றும் அவரது மகள்கள் சாஷா(16), மாலியா(13) ஆகியோர் வர வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோடஸ் கூறியுள்ளார்.

ஒபாமாவின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது குடும்பத்தினர் இணைவது வழக்கம் என்றாலும் இம்முறை சாஷா மற்றும் மாலியா ஒபாமாவும் பள்ளிக்கு செல்ல முக்கியத்துவம் அளித்திருப்பதால் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஒபாமா, வரும் 25-ஆம் தேதி டெல்லி வந்தடைவார். அவர் தனது 3 நாட்கள் இந்திய சுற்றுப் பயணத்தில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதோடு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

வர்த்தக உலகம்

14 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்