மிஸ் இஸ்ரேலுடன் செல்பி: லெபனான் அழகிக்கு சிக்கல்

By ராய்ட்டர்ஸ்

மிஸ் இஸ்ரேலுடன், மிஸ் லெபனான் பட்டம் வென்ற பெண் ஒருவர் `செல்பி' படம் எடுத்துக் கொண்டதால், தன்னுடைய அழகிப் பட்டத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று லெபனான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2006ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை குறித்து இரண்டு நாடுகளும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதற்கும், இஸ்ரேலியப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் லெபனானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிஸ் லெபனான் பட்டம் வென்ற சேலி க்ரைஜ், மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற டோரான் மடாலன் என்பவருடன் எடுத்துக்கொண்ட `செல்பி' படம் இணையத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து தங்கள் எதிரியுடன் படம் எடுத்துக் கொண்டதால் `மிஸ் லெபனான்' பட் டத்தை சேலி க்ரைஜ் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து க்ரைஜ் கூறும் போது, "பிரபஞ்ச அழகிப் பட்டம் வெல்வதற்கான போட்டியில் ஈடுபடத் தொடங்கி யதில் இருந்தே மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற பெண்ணுடன் புகைப்படம் எடுத் துக்கொள்வதைத் தவிர்த்து வந் தேன். எனினும், அவர் தொடர்ந்து முயற்சித்து வந்தார்.

நான் மிஸ் ஜப்பான், மிஸ் ஸ்லோவேனியா ஆகிய பட்டங்களை வென்ற பெண்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்றவர் திடீரென்று கேமரா முன் வந்து விட்டார்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

29 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்