நாகசாகி அணுகுண்டில் உயிர்தப்பிய தபால்காரர் 88 வயதில் மரணம்

By செய்திப்பிரிவு

ஜப்பானின் நாகசாகி நகரில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் உயிர்தப்பிய தபால்காரர் சுமித்ரு தானிகுச்சி 88 வயதில் நேற்று காலமானார்.

இரண்டாம் உலகப்போரின்போது கடந்த 1945 ஆகஸ்ட் 9-ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகர் மீது ‘ஃபேட்மேன்’ என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த குண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சுமித்ரு தானிகுச்சி சைக்கிளில் தபால்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 16.

அணுகுண்டு வெடித்த சத்தத்தை கேட்ட அவர் தரையில் படுத்துக் கொண்டார். இருப்பினும் அணுகுண்டின் வெப்பத்தால் அவரது உடல் முழுவதும் தோல் உரிந்து கொப்பளங்கள் வெடித்தன. சுமார் 4 ஆண்டுகள் அவர் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றார். 16 முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 1949-ம் ஆண்டில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தான் செல்லும் இடமெல்லாமல் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட தனது உடலை காண்பித்து அதன் கொடூரத்தை மக்களுக்கு விளக்கினார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்ட அவர் நாகசாகி நகரில் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

39 mins ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்