அமெரிக்காவுடனான போரை கிம் தூண்டுகிறாரா?

By ஏபி

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையேயான சண்டைகள் எப்போது அதிவேகமாக எழுகிறதோ, அதே வேகத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துவிடும்.

இதுதான் பல காலக் கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இம்முறை இரு நாட்டுக்கு இடையேயான சண்டை அவ்வளவு எளிதில் மங்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கான காரணங்களும் வலுவாகவே அமைந்துள்ளன என்றுதான் கூற வேண்டும்.

இதற்கிடையில் அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, வடகொரியா மீதான கோபத்தை குறைக்கக்கூடும் சூழலும் உருவாகியுள்ளது.

ஆனால் வடகொரியாவோ இதற்கு சற்றும் எதிர்மாறான செயலில் ஈடுபட்டு வருகிறது. பசிபிக் பகுதியிலுள்ள அமெரிக்காவின் ராணுவ தளவாட பகுதியான குவாம் தீவை தாக்குவதற்கு அனைத்து திட்டங்களும் தயார், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆணைக்காகவே காத்திருப்பதாக கொரியா ராணுவத்தினர் சமீபத்தில் கூறியிருந்தனர்.

ட்ரம்ப் நிர்பந்திக்கப்படுவாரா?

வடகொரிய அதிபர் கிம்மை பொறுத்தவரை அமெரிக்கவுடனான போருக்கு அவர் ஓப்புதல் வழங்கினால் அது மிக ஆபத்தானது என்று அவருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமில்லாது கிம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், அளிக்கவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கடுமையான வார்த்தை மோதல்கள் ட்ரம்ப் இந்த விவகாரத்தை கையில் எடுக்க நிர்பந்திக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுவதற்கான சூழலும் எழுந்துள்ளது.

எனினும் இதனை கணிக்க முடியாதவையாகவே தற்போதைய நிலைமை உள்ளது.

யார் முதலில் தொடங்க போகிறார்கள் என்பதுதான் இரு நாடுகளும் வெளிப்படையாக வெளியே சொல்லிக் கொள்ளாத போர் யுத்தியாகும்.

இதற்கு சிறந்த உதாரணம், வடகொரியா குவாம் தீவை தாக்க போவதாக முதலில் கூறியிருப்பது உண்மையில் அது வடகொரியாவின் பாசாங்கு நடவடிக்கையே.  ஏனெனில் வடகொரியாவுக்கு நன்கு தெரியும் இந்தப் போர் நிச்சயம் பேரழிவைத்தான் தரும் என்பது. வடகொரியா இந்தச் சண்டையை தானாக தொடங்க விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் அமெரிக்காவுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.

விடுதலை நாள்

ஆக்ஸ்ட் 15 இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த தினமாகும். மேலும் ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் விடுதலை பெற்ற நாளும் கூட.

இந்த தினத்தில் வடகொரியவின் ராணுவ நடவடிக்கை குறித்த அறிக்கையை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் வடகொரிய நடத்திய ஏவுகணை சோதனை போன்று இது இருக்கலாம்.

போர் விளையாட்டுகள்

அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி போர் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் போர் பயிற்சிகள் வடகொரியா ஒரு ஒத்திகையாகவே பார்க்கிறது.

அமெரிக்காவை தடுத்து நிறுத்துவது என்பது வடகொரியாவின் நீண்ட கால திட்டமாகும். அதற்கான திட்டமாகவே இந்த போர் விளையாட்டுகள்  நடந்து கொண்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்