வெள்ளை மாளிகையில் ரம்ஜான் கொண்டாட்டத்தை கைவிட்ட ட்ரம்ப் வாழ்த்து மட்டும் தெரிவித்தார்

By செய்திப்பிரிவு

வெள்ளை மாளிகையில் 20 ஆண்டு காலமாக மரபாக கடைபிடிக்கப்பட்டுவந்த ரம்ஜான் கொண்டத்தை கைவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து' என்று அறிக்கை மூலம் மட்டும் வாழ்த்தியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் மற்றும் அலுவலகமான வெள்ளை மாளிகையில் கடந்த 20 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஃப்தார் விருந்து அளிப்பதாக பழக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் இஃப்தார் விருந்து வழங்கவில்லை என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் ராம்ஜான் வாழ்த்தாக ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ரம்ஜானை கொண்டாடும் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நானும், மெலானியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடுமுறை நன்னாளில் இரக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுப்படுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

56 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்