அமெரிக்கா மன்ஹாட்டனில் டிரம்பின் நிர்வாண சிலை அகற்றம்

By ஐஏஎன்எஸ்

மன்ஹாட்டன் தேசிய சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை நியூயார்க் நகர அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த சமூக செயப்பாட்டு குழுவான இன்டெக்ளின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் கருத்துகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்டெக்ளின் குழுவினர் டொனால்டு டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டொனால்டு டிரம்பின் முழு நிர்வாண சிலையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மன்ஹாட்டன் தேசிய சதுக்கத்தில் நிறுவி போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து மன்ஹட்டன் பகுதி பூங்கா அதிகாரிகளால் டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை அகற்றப்பட்டது.இன்டெக்ளின் அமைப்பினர் பொது இடத்தில் நிர்வாண சிலையை வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இதுக்குறித்து இன்டெக்ளின் அமைப்பு கூறும் போது " நவின காலத்தின் இனவாதம் மற்றும் மதவாதத்தின் வெறியராக டொனால்டு டிரம்ப் செயல்படுகிறார். இதே எண்ணத்துடன் டொனால்டு டிரம்ப் செயல்பட்டால் அதிபர் தேர்தலில் தோல்வியைதான் தழுவுவார்" என்று கூறியுள்ளனர்.

இதே போன்ற போராட்டங்களை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இன் டெக்ளின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலையை அகற்றுவதற்கு முன்னதாக பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் டிரம்பின் நிர்வாண சிலையுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

35 mins ago

க்ரைம்

39 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்