கிம்முக்கு ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லை: தென்கொரியா

By செய்திப்பிரிவு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறார் என்று தென்கொரியா கூறியுள்ளது.

தென்கொரியாவின் சிறப்புத் தூதரான சங் யின் யங் புதன்கிழமையன்று வடகொரியாவின் தலைநகரான பியோங்கியாங்கில் அந்நாட்டு அதிபரான கிம்மை சந்தித்தார்.

இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து சங் கூறும்போது, "அமெரிக்க அதிபர் மீது கிம் நம்பகத்தன்மை இல்லமால் இருக்கிறார். ட்ரம்பின் பதவிக் காலம் முடிவதற்குள் வடகொரியா அதன் அணுஅயுதங்களை அழிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வடகொரிய பத்திரிக்கை ஒன்றில் கிம் கூறும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து தவறாக ஏதும் கூறவில்லை” என்று கூறியிருக்கிறார்.

வடகொரியாவும், அணுஆயுத சோதனைகளும்

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணுஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தகக்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்