பாகிஸ்தானில் தொடர்ந்து கனமழை; பலி 70 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மற்றும் பாகிஸ் தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. லாகூர் உட்பட பெரும் பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளின் கூரை சரிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது போன்றவற்றால் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு பருவ மழையின் தீவிரத்தால் 178 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்குப்பிறகு மோசமான இயற்கைப் பேரிடராக இது கருதப்படுகிறது. செனாப் நதியோரப் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ளவர் கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பது மிகவும் அபாயகரமானது என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு வினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதிப்புக்கு உள்ளான பகுதிகளி லிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

மீட்புப் பணிகள் துறை தலைவர் ரிஸ்வான் நஸீர் கூறும்போது, “மழை பாதிப்புகள் காரணமாக, பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர், 108 பேர் காயமடைந்துள்ளனர். லாகூரில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் கூரை சரிந்து விழுந்தது மற்றும் மின்சாரத் தாக்குதலால் ஏற்பட்டவை” என்றார்.

கிராமங்கள் வெள்ளப் பெருக்கால் சூழப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மலைப்பகுதியில் நிலச் சரிவு காரணமாக மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் 31 பேர் உயிரிழந் துள்ளனர் என முஸாபர்பாத் பேரிடர் மேலாண்மைத் துறைத் தலைவர் அக்ரம் சோஹைல் தெரிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு

வடகிழக்கு பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்யக்கூடும், அது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக் கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் 2010-ம் ஆண்டு பெய்த கன மழையில் 1,800 பேர் உயிரிழந்தனர்; 2.1 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்