இந்தியா மீது மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் பிரச்சினை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

இந்தியா மீது  மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் அது மிகுந்த பிரச்சனையாகும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின்  நிர்வாக அதிகாரி கூறும்போது, ''பாகிஸ்தான் அதன் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறிப்பாக ஜெய்ஷ்- இ- முகமது மற்றும் லஷ்கர்- இ- தொய்பா மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான்  நடவடிக்கை எடுக்காமல் இந்தியாவில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், இது மிகுந்த பிரச்சினையை ஏற்படுத்தும். இது அந்த பிராந்தியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். இது இரு நாட்டுக்கும் ஆபத்து'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம்  ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப் படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துப் பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது  அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்