ஐஎஸ் தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல்: அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது பிரிட்டன்

By ஏஎஃப்பி

இராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்தி வரும் வான் தாக்குதலில் பிரிட்டனும் இணைய உள்ளது.

நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பிரதமர் டேவிட் கேமரூன் கோரியுள்ளார். ஐஎஸ் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் எம்.பி.க்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என்றே தெரிகிறது. ஐஎஸ் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டு மென்று ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு அடுத்த நாளே பிரிட்டன் களமிறங்க தயாராகிவிட்டது.

பிரிட்டன் தாக்குதலில் ஈடுபடும் போது இராக்கில் மட்டும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும், சிரியாவில் பிரிட்டன் தலையிடாது என்றும் தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இருவரையும், பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த தலா ஒருவரை யும் ஐஎஸ் தீவிரவாதிகளை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். தங்கள் பிடியில் உள்ள மேலும் ஒரு பிரிட்டன் நாட்டவரை கொல்லப் போவதா கவும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தவிர அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடு களைச் சேர்ந்தவர்களும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் பேர் உள்ளனர். இது அந்த நாட்டு அரசே எதிர்பார்க்காத அதிர்ச்சியாகும். இராக்கில் சுமார் ஒரு மாதகாலமாக அமெரிக்க விமானங்கள் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் சிரியாவில் கடந்த நான்கு நாட்களாக தாக்குதல் நடைபெறு கிறது. தீவிரவாதிகளின் நிதி ஆதாரமாக திகழ்ந்த எண்ணெய் வயல்களை குண்டு வீசி அழித்த அமெரிக்க ராணுவம், அந்த வீடியோ காட்சியையும் வெளியிட் டுள்ளது.

கிழக்கு சிரியா, வடமேற்கு இராக்கின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் அப்பகுதியை தனிநாடாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சர்வ தேச சமுகத்துக்கு எதிராக தீய சக்தி ஒன்று செயல்பட்டு வருகிறது. நீதி, ஜனநாயகம், சுதந்தி ரம் ஆகியவற்றை காப்பாற்ற பிரிட்டன் தனது பங்களிப்பை ஆற்ற இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பிரான்ஸ் போர் விமானங்கள் நேற்று முன்தினம் முதல் இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான இந்த நடவடிக்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா 6 போர் விமானங்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளன.

இதுதவிர இராக் ராணுவத்துக்கு பயிற்சியளிக்க நெதர்லாந்து தங்கள் ராணுவ வீரர்களை அனுப்ப இருக்கிறது. கிரீஸ் அரசு குர்திஸ் படையினருக்கு பயிற்சி அளிக்க இருக்கிறது. பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அரபு நாடுகள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்