”ஜமாலை கொல்ல இளவரசர் உத்தரவிடவில்லை” - சவுதி அமைச்சர்

By செய்திப்பிரிவு

ஜமாலை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிடவில்லை என்று மீண்டும் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் பேசும்போது, “சவுதி இளவரசர் முகமது சல்மான் பத்திரிகையாளர் ஜமாலை கொல்ல உத்தரவிடவில்லை. மேலும் 2017 -ம் ஆண்டிலேயே ஜமாலை கொல்ல இளவரசர் திட்டமிட்டார் என்ற செய்திகள் பத்திரிகைகள் வெளியாகி உள்ளன.  இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக  விசாரணை  நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை இவ்வாரம் வெளியிட்டது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13  நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 மேலும் ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்