அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன் நினைவிடத்துக்குச் செல்கிறார் மோடி

By செய்திப்பிரிவு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலை, மார்டின் லூதர் கிங் மற்றும் ஆபிரஹாம் லிங்கன் நினைவிடங்களுக்கு வரும் 30-ம் தேதி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.

பிரதமரான பிறகு முதல் முறையாக அமெரிக்காவுக்கு இந்த மாத இறுதியில் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

அதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவார். கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங்கின் நினைவிடத்துக்கும் மோடி செல்லும் வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், நியூயார்க் செல்லும் மோடி, இரட்டை கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில், இந்த பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்