சோமாலியாவில் பஞ்சம்: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்

By செய்திப்பிரிவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பஞ்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் உணவு, ஊட்டச்சத்து இன்றி பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐ.நா. வல்லுநர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் சண்டை, மழையின்மை ஆகியவை இதற்கு காரணமாகி விட்டது. வறட்சி ஏற்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இதனிடையே பஞ்சப் பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது.

வறட்சி, பஞ்சம் பாதிப்பில் இருந்து 2012-ல் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், மழை பற்றாக்குறை, மோதல்கள், வர்த்தகத்தில் பாதிப்பு, மனிதாபிமான உதவி கிடைக்காமை ஆகியவை உணவுப் பஞ்சத்துக்கு வழிகோலிவிட்டன.

நாட்டின் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை இந்த நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது.

சுமார் 43 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் மடியும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. 2011-ல் ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பாதிப்பேர் குழந்தைகள்.

2012-ல் அரசு அமைந்தபோதிலும் ஊழல் புகார், ஷெபாப் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 mins ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

47 mins ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்