வெனிசுலாவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்கம் ஆய்வு மையம் தரப்பில், ''வெனிசுலாவில் உள்ள சான் டியாகோ நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கேரபோவா பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் சுமார் 2 மணி 29 நிமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 நொடிகளுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும் இதனால் வீடுகள் குலுங்கியதாகவும் இந்த நிலநடுக்கத்தை நேரில் உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை ஏன்று ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
11 mins ago
சினிமா
14 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
12 mins ago
சினிமா
30 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
24 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
38 mins ago
வலைஞர் பக்கம்
42 mins ago
சினிமா
47 mins ago