இந்தியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள மோசமான உறவு வருத்தம் அளிக்கிறது: நவாஸ் ஷெரீப்

By செய்திப்பிரிவு

அண்டை நாடான இந்தியாவுடன் சுமுகமான உறவை பாகிஸ்தான் ஏற்படுத்திக்கொள்ளாதது கவலை அளிப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்: "இந்தியா உடன் சுமுகமான உறவை பாகிஸ்தான் ஏற்படுத்திக்கொள்ளாதது கவலை அளிக்கிறது. இந்தியா உடனான உறவை புதுப்பிக்க வேண்டி தருணம் வந்துவிட்டது. இந்தியா - பகிஸ்தான் வெளியுறவு செயலர்களுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, " ஆப்கானிஸ்தான் உடனான உறவையும் மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. அந்நாட்டில் அமைய உள்ள புதிய தலைமை இதற்கான ஒத்துழைப்பை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பஞ்சாப் மாகாணத்தில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக தகீர்-அல்-கதாரி இயக்கம் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று இந்த இயக்கம் இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது கலவரத்தை ஏற்பட செய்யும். இந்த அறிவிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாகிஸ்தான் ராணுவ தளபதி ரகீல் ஷெரீப், ஐ.எஸ்.ஐ. தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்