ஒலிம்பிக் 13- வெளிப்புற அரங்கில்தானே விளையாடுவார்கள்?

By செய்திப்பிரிவு

குளிர்கால ஒலிம்பிக்ஸ் என்று தனியாக நடத்தப்படுவதை நார்வே போன்ற நாடுகள் மிகவும் வரவேற்றிருக்கும் அல்லவா?
ஏனென்றால் அங்கு குளிர்கால விளையாட்டுகள் பலவும் விளையாடப்படுகிறதே!

அல்ல. ஏனென்றால் நோர்டிக் போட்டி என்ற ஒன்றை நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் 1901லிருந்தே நடத்தி
வந்தன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் அறிமுகமானால் அந்தப் போட்டிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று பயந்தன. என்றாலும் பின்னர் ஒருவழியாக சமாதானம் அடைந்தன.

முதல் குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றது எந்த நாடுகள்?

முதலிடம் நார்வேவுக்கு. இரண்டாமிடம் பின்லாந்துக்கு. மூன்றாமிடம் பிரிட்டனுக்கு. நான்காமிடம் அமெரிக்காவுக்கு கிடைத்தது.

பொதுவாக எந்த நாடுகள் குளிர்கால ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன?

இதுவரை நடைபெற்ற அத்தனை ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளிலும் பங்கேற்றவை பன்னிரண்டு நாடுகள். அவை
சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், போலந்து, நார்வே,ஆஸ்திரியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், ஹங்கேரி, இத்தாலி மற்றும் அமெரிக்கா. அத்தனை குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளிலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு தங்கப்பதக்கத்தையாவது வென்ற நாடு அமெரிக்கா மட்டுமே.ஒட்டுமொத்தமாக மிக அதிகமான பதக்கங்களை குளிர்கால ஒலிம்பிக்ஸில் வென்றிருப்பது நார்வேதான். என்றாலும் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் இப்போது ஒன்றாகிவிட்ட நிலையிலும் அந்த இரு நாடுகளும் இணைந்து மொத்தமாக வென்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் பதக்கங்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதற்குத்தான் முதலிடம். இரண்டாவது இடம் நார்வேவுக்கு.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எப்போதுமே வெளிப்புற அரங்குகளில் நடத்தப்படுபவைதானே?

பெரும்பாலும் அப்படித்தான். ஆனால், ஐஸ் ஹாக்கி, விரைவு ஸ்கேட்டிங், ஃபிகர் ஸ்கேட்டிங் மற்றும் கர்லிங் ஆகிய நான்கும் உட்பறத்தில் நடத்தப்படும் உள்ளரங்கு விளையாட்டுகள்தாம்.

இந்தப் போட்டியில் இதுவரை பதக்கம் பெற்றவர்களிலேயே வயதில் மூத்தவர் யார்?

ஸ்கீ ஜம்பராக விளங்கிய ஆண்டர்ஸ் ஹாகன்தான். இந்த அமெரிக்கர் தேசிய அளவில் நான்கு முறை சாம்பியனாக விளங்கி
யவர். 1924-ல் ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது, ஸ்கோரிங்கில் செய்யப்பட்ட ஒரு தவறு காரணமாக இவருக்குப் பதக்கம் வழங்கப்படவில்லை. அந்தத் தவறு 1974-ல் (அதாவது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு!) கண்டுபிடிக்கப்பட, தனது 83வது வயதில் அந்த விளையாட்டு வீரர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் இயற்கையான இடங்களில்தான் நடைபெறும் அல்லவா?

உட்புறம் நடத்தப்படும் நான்கு விளையாட்டுகள் குறித்து ஏற்கனவே கூறிவிட்டோம். 1980ல் லேக் பிளாசிட் என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெற்றபோது நியூயார்க்கில் உள்ள அந்தப் பகுதியில் முதல் முறையாக செயற்கை பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடைபெற்றன.

(தொடர்ந்து விளையாடுவோம்).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்