அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் 93 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது கூடுதலாக 53 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே எப்படி பாடம் நடத்தப்பட்டதோ அதுபோலவே நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி முடிவடைந்ததும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் முழுமையாக நடைபெறும். தமிழகத்தில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 5 லட்சத்து 34 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதே மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம்.

இந்தாண்டு பள்ளிகள் முழுமையாக நடைபெறுகிறது. அதனால் எந்தப் பாடத்தையும் குறைக்கப் போவதில்லை. பள்ளிகளில் ஒளிபரப்பப்படும் சிறார் திரைப்படங்கள் மூலம்மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

க்ரைம்

7 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

க்ரைம்

47 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்