பிளஸ் 2 வினா வங்கி தட்டுப்பாடு: அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 வினா வங்கி கையேடு விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம்சார்பில் ஆண்டுதோறும் வினா வங்கி புத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. நடப்பு ஆண்டில்பள்ளிகள் திறப்பு தாமதம் காரணமாக புதிதாக வினா வங்கி புத்தகங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம்அச்சிடவில்லை. கடந்த ஆண்டு விற்பனையாகாமல் இருந்த பழைய புத்தகங்களையே விற்பனை செய்துவந்தது.

இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில்வினா வங்கி கையேடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ளமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும், சென்னையில் டிபிஐ வளாகம், சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளி ஆகியஇடங்களிலும் வினா வங்கி கையேடு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், அறிவியல் பிரிவு பாடங்களுக்கான கையேடுகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதர கலை, தொழிற்பிரிவுக்கான புத்தகங்கள் விற்பனைமுடிந்து விட்டதாகவும், தேவையெனில் அருகே உள்ள மாவட்ட விற்பனை மையங்களில் வாங்கிக்கொள்ளவும் அறிவுறுத்துகின்றனர்.

மாவட்ட மையத்தில் கேட்டால்,அங்கேயும் கையிருப்பு இல்லைஎன்கின்றனர். இதனால் பெற்றோர்வீண் அலைச்சலுக்கு ஆட்படுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தேவையான புத்தகங்களை உடனே அச்சிட்டு விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

18 mins ago

வலைஞர் பக்கம்

22 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்