8-ம் வகுப்பு வரை ஆஃப்லைன் தேர்வுகள் இல்லை: டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

By பிடிஐ

டெல்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 8-ம் வகுப்பு வரை ஆஃப்லைன் தேர்வுகள் கிடையாது என்று அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2020- 21ஆம் கல்வியாண்டில் மதிப்பீடு வழங்குவது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு மையம் வந்து காகிதத்தில் எழுதும் தேர்வுகள் கிடையாது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறாததை ஒட்டி, இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

ஆஃப்லைன் தேர்வுகளுக்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்தையும் மதிப்பிடும் வகையில் 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்கள் வழங்கப்படும்.

3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பணித்தாள்களை (work sheets) மதிப்பிட்டு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல் குளிர்கால விடுமுறையின்போது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 30 மதிப்பெண்களும் மார்ச் 1 முதல் 15 வரை வழங்கப்பட்ட புரொஜெக்டை மதிப்பிட்டு 40 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

அதேபோல 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பணித்தாள்களை (work sheets) மதிப்பிட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல் குளிர்கால விடுமுறையின்போது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 30 மதிப்பெண்களும் மார்ச் 1 முதல் 15 வரை வழங்கப்பட்ட புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்களை மதிப்பிட்டு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

எந்த ஒரு மாணவரிடமாவது டிஜிட்டல் சாதனங்களோ, இணைய வசதியோ இல்லாத சூழலில், புராஜெக்டுகள் மற்றும் அசைன்மென்ட்களைக் கையால் எழுதி, பெற்றோர் மூலம் பள்ளிக்கு மாணவர்கள் கொடுத்து அனுப்ப வேண்டும். அப்போது கோவிட் -19 விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்