திருநெல்வேலியில் பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

By அ.அருள்தாசன்

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் கல்லணை மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. 10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகமாகப் பள்ளிகளுக்கு வந்தனர். முன்னதாக இந்தப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றன.

திருநெல்வேலி டவுன் கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் 685 மாணவிகளும், 10- ம் வகுப்பில் 677 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதில் 90 சதவீத மாணவிகள் இன்று பள்ளிக்கு வந்திருந்தனர். டவுன் கல்லணை பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.நாச்சியார், உதவி ஆசிரியர்கள் எஸ்.மலர்விழி, எஸ்.லதா, தொழில் ஆசிரியர் கவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

27 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

விளையாட்டு

53 mins ago

இந்தியா

57 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்