மத்திய அரசின் உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வுத் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் இரண்டாம் நிலைத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை என்சிஇஆர்டி எனப்படும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்துகிறது. இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

மாதம்தோறும் உதவித்தொகை

தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும் ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பிஎச்டி படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.

இந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (முதல் கட்டத் தேர்வு) டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்த்து.

இந்நிலையில் தேர்வு 2021 பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் என்சிஇஆர்டி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

16 mins ago

உலகம்

23 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்