கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கற்பிக்கும் 91 வயது ஆசிரியர்: வைரலாகும் படங்கள்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 91 வயது ஆசிரியர் சார்லஸ் க்ரான், ஆன்லைன் மூலம் கற்பிக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் மின்னஸோட்டா பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் க்ரான். 91 வயதான இவர் செயின்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த அவர், கரோனா காரணமாக வீட்டில் முடங்கினார். ஆன்லைன் வகுப்புகளைக் கையாளவும் தடுமாறினார்

இதை அறிந்த அவரின் மகள் ஜூலியா, ஹூஸ்டனில் இருக்கும் தனது வீட்டுக்குத் தந்தையை அழைத்துச் சென்றார். அங்கே ஆன்லைன் மூலம் எப்படிக் கற்பிப்பது என்பதை உரிய உபகரணங்களுடன் விளக்கினார். மெய்நிகர் வகுப்பறை முறையைத் துரிதமாகக் கற்றுக்கொண்டார் சார்லஸ். தனது மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

இதுகுறித்துப் புகைப்படம் எடுத்த ஜூலியா, அதைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன், ''ஹோமரின் 'தி ஒடிசி' பாடத்தை என் தந்தை கற்பிப்பதை 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகப் பார்க்கிறேன். இதுதான் உண்மையான பரிசு.

50 ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தாலும் இன்னும் ஆசிரியப் பணி மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் முதல் முறை போலக் காட்டுகிறார். அவரின் மாணவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது அவர்களுக்கே தெரியாது'' என்று தெரிவித்திருந்தார்.

சார்லஸ் ஆன்லைன் வகுப்பு எடுப்பது தொடர்பான படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்