சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு: 19 நாட்களிலேயே வெளியானது

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று (அக்.23) இரவு வெளியானது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்று காரணமாகப் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு அக். 4-ம் தேதி நடைபெற்றது. தேர்வில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட மையங்களில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர். வழக்கமாக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றுக் குறைந்தது ஒரு மாதத்துக்குப் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாகத் தேர்வு நடைபெற்ற 19 நாட்களிலேயே முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10,556 மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். ஜனவரி 8-ம் தேதி முதல் முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற ஆட்சிப் பணிகளுக்கான 790 பணி இடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

16 mins ago

வலைஞர் பக்கம்

20 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

38 mins ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்