‘சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்’, ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று பொறியியல் சேர்க்கை குறித்து செயலர் உரை

By செய்திப்பிரிவு

‘சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று (அக். 15) காலை 11 மணிக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருசோத்தமன் உரையாற்றுகிறார்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை இன்று காலை 11 மணிக்கு நடத்துகிறது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கை நடைமுறை, கல்லூரிகள், பாடப் பிரிவுகளை தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருசோத்தமன் பங்கேற்று, மாணவர் சேர்க்கை தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்கள் குறித்து பேச உள்ளார். இந்தநிகழ்ச்சியை கோயம்புத்தூர் ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் இணைந்து நடத்துகிறது.

இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://connect.hindutamil.in/event/46-tnea-counsellling.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

26 mins ago

வாழ்வியல்

50 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

24 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்