பொறியியல் இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்லூரிகளில் பி.டெக். படிப்புகளுக்கான நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'' * பாலிடெக்னிக் படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேரலாம்.

* பட்டியலினப் பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது.

* மாணவர் சேர்க்கையில் பாலிடெக்னிக் படிப்பு படித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* அவர்களுக்கான சீட்டுகள் நிரப்பப்பட்ட பிறகு, இடமிருந்தால் பி.எஸ்சி படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் நேரடியாக இரண்டாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேரலாம்.

* பி.எஸ்சி முடித்து பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் கட்டாயம் முதலாமாண்டில் உள்ள பொறியியல் துறை சார்ந்த சில பாடங்களை (இன்ஜினீயரிங் கிராபிக்ஸ்/ இன்ஜினீயரிங் ட்ராயிங் மற்றும் இன்ஜினீயரிங் மெக்கானிக்ஸ்), இரண்டாமாண்டில் சேர்த்துப் படிக்க வேண்டியது அவசியம்.

* தொழில் துறையில் டிப்ளமோ முடித்தவர்களும் இரண்டாமாண்டு படிப்பில் சேரலாம். ஆனால் அவர்களுக்கு அடிப்படைப் பொறியியல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.aicte-india.org/sites/default/files/Circular%20_17.09.2020.pdf#overlay-context=

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்