எம்பிஏ படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் இல்லை

By செய்திப்பிரிவு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எம்பிஏ மற்றும் முதுநிலை மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கேட், மேட், சிமேட் உள்ளிட்ட பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிஏ மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதேநேரம் ஏதேனும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றை மாணவர்கள் எழுதியிருந்தால் சேர்க்கையின்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உத்தரவு 2020-21 கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்