பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாநில அளவில் கோவை முதலிடம்: 98.10 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில், 98.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்த்தி விகிதத்தில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கூறும்போது, "மாவட்டத்தில் தேர்வெழுதிய 15,415 மாணவர்களில் 15,011 பேரும், 18,832 மாணவிகளில் 18,586 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 34,247 பேர் தேர்வெழுதியதில் 33,597 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த கோவை மாவட்டம், நடப்பாண்டு 98.10 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 95.25 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 96.81, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 97.96, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79, நகராட்சிப் பள்ளிகளில் 99.14, அறநிலையப் பள்ளிகளில் 94.08, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 99.70, மெட்ரிக் பள்ளிகளில் 98.98, தனியார் பள்ளிகளில் 98.98 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்றார். மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்ட மாணவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் விவரம்:

பன்னிமடை அரசு மேல்நிலைப் பள்ளி (99 பேர்), வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி (92 பேர்), சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (81 பேர்), பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி (73 பேர்), சுண்டபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி (66 பேர்), புங்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி (59 பேர்), சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி (56 பேர்), தென்பொன்முடி இஏபி அரசு மேல்நிலைப் பள்ளி (53 பேர்), காங்கயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி (52 பேர்), பொள்ளாச்சி காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி (35 பேர்), கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி (27 பேர்), சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி (22 பேர்), அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளி (16 பேர்).

மொத்தமுள்ள 86 அரசுப் பள்ளிகளில் படித்த 8,207 மாணவர்களில் 7,817 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 95.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல, வேல்ஸ்புரம் அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி (20 பேர்), ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (81 பேர்) ஆகியவையும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருப்பூர் 5-ம் இடம்

திருப்பூர் மாவட்டத்தில் 11,615 மாணவர்கள், 14,007 மாணவிகள் என 25,622 பேர் தேர்வெழுதினர். இதில் 11,208 மாணவர்கள், 13,750 மாணவிகள் என 24,958 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் 97.41 சதவீத தேர்ச்சியுடன், மாநில அளவில் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.52 சதவீத தேர்ச்சி குறைவாகும். 6 அரசுப் பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள், 6 சுயநிதி பள்ளிகள், 89 மெட்ரிக் பள்ளிகள் என 103 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

நீலகிரி 96.69% தேர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் 3,260 பேரில் 3,105 பேர், மாணவிகள் 3,775 பேரில் 3,697 பேர் என தேர்வு எழுதிய 7,035 பேரில் 6,802 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 92.25, மாணவிகள் 97.93 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.69 சதவீத தேர்ச்சி ஆகும்.

33 அரசுப் பள்ளிகளில் 2,624 பேர் தேர்வு எழுதியதில், 2,460 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 93.75-ஆக பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 1.82 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

க்ரைம்

9 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்