பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: 10-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்திய புதுச்சேரி ஆட்சியர்

By செ.ஞானபிரகாஷ்

பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள் என்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவிகளை புதுச்சேரி ஆட்சியர் ஊக்கப்படுத்தினார்.

புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி, தேர்வு எழுதத் தேவையான பேனா, ஜியோமெட்ரி பாக்ஸ் போன்றவை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருண் பங்கேற்றார். தேர்வை பயம் இல்லாமல் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு தனது அனுபவங்களையும் கூறி மாணவிகளை வாழ்த்தினார்.

"பாடங்களை விருப்பத்துடன் படித்தல் அவசியம். புரிந்து படித்தால் வெல்லலாம். அரசுப் பள்ளியில் படித்து சாதித்தோர் பலருண்டு" என்று ஆட்சியர் அருண் குறிப்பிட்டார். தேர்வு எழுதத் தேவையான பேனா, ஜியோமெட்ரி பாக்ஸ், சான்றிதழ்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு ஃபைல் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, 'குளங்கள் காப்போம்' குழு கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் எழில் கல்பனா முன்னிலை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்