அரசு கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா: உயர்கல்வித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அரசு கல்லூரி வளாகங்களில் ரூ.2.5 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதன்பின் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் விவரம்: 23 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.4.6 கோடியில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய தள வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் ரூ.2.5 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதேபோல், அரசு கலை,அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் மகளிர் பாதுகாப்பு வசதி மையம் ரூ.1 கோடியில் நிறுவப்படும். அழகப்பா பல்கலை.யில் ஒரு கோடி ரூபாயில் தமிழ் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்று மையம்அமைக்கப்படும் என்பன உட்பட 44அறிவிப்புகள் வெளியிடப்பட் டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்