செய்திகள் சில வரிகளில்: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு டீ காபி இலவசமாக கொடுக்கும் திட்டம்

By செய்திப்பிரிவு

குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அரசிடம் வழங்கினால், அதற்கு பதிலாக இலவசமாக டீ, காபி, திண்பண்டங்கள் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட மேம்பாட்டு அதிகாரி பதன்வாடியா கூறுகையில், “தஹோத் பகுதியில் பிளாஸ்டிக் கபே’’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையை கபேவிடம் வழங்கினால் சிற்றுண்டியும், அரை கிலோ குப்பைக்கு டீ, காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்படுகிறது” என்றார்.

புலம்பெயர் பறவைக்கும் கரோனாவுக்கும் தொடர்பு இல்லை

புதுடெல்லி

புலம்பெயரும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் 13-வது சர்வதேச மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது. மாநாடுக்கு முன்னதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், “புலம்பெயரும் பறவைகள் மூலமாக கரோனா வைரஸ் பரவும் என்று அச்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த பறவைகளுக்கும் வைரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேநேரம், மாநாட்டில் பறவைகள், விலங்குகளிடம் இருந்து வரும் நோய்கள் அல்லது வைரஸ்களை குறித்து விவாதிக்கபடும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 mins ago

விளையாட்டு

22 mins ago

இந்தியா

26 mins ago

உலகம்

33 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்