சீனாவில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சீனாவில் வேகமாகப் பரவும் மர்மகாய்ச்சலைத் தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் கடந்த 2002-ம் ஆண்டு ‘சார்ஸ்’என்ற வைரஸ் கிருமி பரவியது. இந்த வைரஸ் கிருமி சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு வேகமாக பரவியது. சார்ஸ் வைரஸ் கிருமியால் ஏற்பட்ட மூச்சுக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 8,422 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 916 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவின் உஹான் மாகாணத்தில் ‘கரோனா’ என்ற புதிய வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1,700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரோனா வைரஸ் செயல்பாடுகள், சார்ஸ் வைரஸ் போன்றே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சார்ஸ் வைரஸால் ஏற்படும் மூச்சுபிரச்சினை, அதிக சளி, இருமல்போன்றவைதான் இதற்கும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல்வேறு பணிக்காக சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனாநோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சான் பிரான்சிஸ்கோ,நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்டவிமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், சீனாவுக்கு செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. யாரும் அச்சம் கொள்ளவேண்டாம்.

தொற்று நோய் தடுப்புநடவடிக்கைகளில் தமிழக அரசுஎப்போதும் சிறப்பான நடவடிக்கைகள்எடுக்கும். நிப்பா, எபோலா போன்றவைரஸ் பாதிப்புகளின் போதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம்தமிழகம் பாதுகாப்பாக இருந்ததைஉதாரணமாக கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்