திருச்சி பண்பலை வானொலியின் மலரும் மொட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொய்யாமணி அரசு பள்ளி மாணவர்கள்

By செய்திப்பிரிவு

திருச்சி பண்பலை வானொலியின் மலரும் மொட்டும் நிகழ்ச்சியில் பொய்யாமணி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஜனவரி 19-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திருச்சி பண்பலை வானொலியின் மலரும் மொட்டும் நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருக்குறள், நீதிக்கதைகள், ஆத்திச்சூடி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமொழி, கவிதை, பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு உரை போன்றவற்றில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆட்சியராக விரும்பிய மாணவி மாவட்ட ஆட்சியராக விரும்புவதாக தெரிவி த்த இப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி மனோப்ரியாவை, மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தனது இருக்கையில் அமர வைத்து ஏற்கெனவே பெருமைபடுத்தினார்.

அந்த மாணவியின் பேட்டியும் இதில் இடம் பெறுகிறது. நிகழ்ச்சியை 7-ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியை முத்துலட்சுமி, ஆசிரியர்கள் பூபதி, தமிழ்பூங்குயில் மொழி, உமா ஆகியோர் மாணவ, மாணவிகளை வானொலி நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்நிகழ்ச்சி ஜன. 19-ம் தேதி திருச்சி பண்பலை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. ஏற்கெனவே இப்பள்ளி மாணவ, மாணவிகளின் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி டிச.25-ல் பண்பலையில் ஒலிபரப்பானது என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்