பள்ளிகளில் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் என்ன?- அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் என்ன என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிந்து, அவற்றை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 300 மாணவா்களுக்கு குறையாமல் படித்து வரும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் வசதிகள் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி, கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறை வசதிகள், பள்ளிகளுக்கான சுற்றுச்சுவா் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவலை விரிவான பரிந்துரை அறிக்கையாகத் தயாா் செய்ய வேண்டும். அதை ஜனவரி 31-ம் தேதிக்குள் இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதைத் தொடா்ந்து, உரிய அறிக்கைகள் பரிசீலிக்கப்படும். நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும். இந்த அறிக்கையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளின் பெயரை பரிந்துரை செய்யக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

28 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்