அரசு பள்ளி வளாகத்தில் சம்பா சாகுபடி நடவு பணி

By செய்திப்பிரிவு

காரைக்கால்

விவசாயம் குறித்த புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் சம்பா சாகுபடிக்கான நாற்று நடும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம், தோட்டக்கலை குறித்த புரிதல் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய இடத்தில் நெல் சாகுபடி, தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி மாணவர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சம்பா சாகுபடி செய்யும் விதமாக சி.ஆர். நெல் ரக நாற்றுகளை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வேறு இடத்தில் இருந்து நாற்றுகள் பெறப்பட்டு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் (பொறுப்பு) ரத்தினசபாபதி முன்னிலையில் நடவு செய்யப்பட்டது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடவுப் பணியை மேற்கொண்டனர். நாற்று உருவாக்கம், நடவுப் பணி, இயற்கை உரமிடுதல், களையெடுத்தல், அறுவடைக் காலம் வரையிலான வேளாண் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்