ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: விடுதியில் தங்கி இருக்கிறேன்!

By ஜி.எஸ்.எஸ்

குணா, சந்துரு இருவரும் ஒரே பள்ளியில் படித்தாலும் அப்போதுதான் முதல் முறையாக உரையாடுகிறார்கள். பேருந்தில் பயணம் செல்லும்போது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Chandru – Are you staying with your parents?

Guna – No. I live in hostel.

Chandru – Where are your parents?

Guna – They are in their native place.

Chandru – Which is your native place?

Guna – Kancheepuram. It is famous to many temples. OK, our school has come. We will meet in the evening.

Chandru – Yes. I will weight for you.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்தஉரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

I live in hostel என்று குணா கூறுகிறான். I stay in hostel என்பது சரியானது.

தன் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிடும்போது They live in their native place என்கிறான் குணா. அதுஅவனுடைய native place ஆகவும்தானே இருக்கும்? எனவே they live in our native place என்று அவன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

Kancheepuram is famous to என்பது தவறு அது famous for என்றிருக்க வேண்டும்.

பேருந்தில் செல்லும்போது பள்ளி தென்பட்டால் பேச்சு வழக்கில் ‘ஸ்கூல் வந்துடுச்சு’ என்பதுபோல் சொல்வோம். ஆனாலும் ஆங்கிலத்தில் our school has come என்று கூறக்கூடாது. We have reached our school என்றோ we have arrived at the school bus stop என்றோ கூறலாம்.

I will wait for you என்றால் நான் உனக்காகக் காத்திருப்பேன் என்று பொருள். Weight என்றால் அது எடையைக் குறிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்