அந்தமான், சென்னை உதகைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் :

By செய்திப்பிரிவு

கனமழை எச்சரிக்கை காரணமாக அந்தமான், சென்னை மற்றும் உதகை பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பேருந்து மற்றும் விமானம் மூலம் விரைந்து சென்றுள்ளனர்.

அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அங்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 100 பேர் நேற்று சிறப்பு விமானத்தின் மூலம் அந்தமான் விரைந்தனர். சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் மேற்பார்வையில் தலா 25 பேர் கொண்ட 4 குழுவினர் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் புறப்பட்டனர்.

அதேபோல், சென்னை மற்றும் உதகையில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் 25 பேர் கொண்ட தலா இரண்டு குழுவினர் சென்னைக்கு பேருந்து மூலமாகவும் உதகைக்கு மற்றொரு விமானம் மூலம் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

க்ரைம்

8 mins ago

இந்தியா

6 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

52 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்