புதிய சாலை அமைக்காததை கண்டித்து வேளாங்கண்ணியில் திமுக சாலை மறியல் 9 பெண்கள் உட்பட 85 பேர் கைது

By செய்திப்பிரிவு

புதிய சாலை அமைக்காததை கண்டித்து வேளாங்கண்ணியில் சாலை மறியலில் ஈடுபட்ட

9 பெண்கள் உட்பட 85 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேராலயம் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை உள்ளது. இந்த சாலை அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக குண்டும் குழியுமாக மாறிவிட்டது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கீழையூர் ஒன்றிய திமுக சார்பில் வேளாங்கண்ணி முச்சந்தியில் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் திமுகவினர், ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த நாகை காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு, கீழ்வேளூர் வட்டாட் சியர் கார்த்திகேயன், வேளாங் கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திமுக வினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, வேளாங்கண்ணி போலீஸார் 9 பெண்கள் உட்பட 85 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

37 mins ago

சுற்றுலா

49 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

56 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

17 mins ago

மேலும்